பலஸ்தீனியர்களுக்கு பதில் இந்தியர்களா ! இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் நிலவி வரும் பதவி வெற்றிடங்களுக்கு இந்தியர்களை பணியமர்த்தவுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் பணிபுரியும் பலஸ்தீனியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள பணி வெற்றிடங்களுக்கே இந்தியர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே உக்கிரமடைந்து வரும் போரில் காசா மக்கள் பல ஆயிரக்கணக்கில் உயிரிழந்துவரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள பலஸ்தீனர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டது மாத்திரமன்றி, இஸ்ரேல் அரசே பலஸ்தீனர்களை பணியமர்த்த தடை விதித்தது.

தவிரவும் இஸ்ரேலில் பணிபுரியும் பலஸ்தீனியர்களின் பணியாளர் உரிமங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் இஸ்ரேல் நிறுவனங்கள் பலவற்றில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக முக்கியமாக கட்டுமானப் பணிகளுக்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுவதாகத் தெரிவைக்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் தெல் அவிவில் உள்ள பல கட்டுமான நிறுவனங்கள், இஸ்ரேல் அரசிடம் 1 லட்சம் இந்தியர்களைப் பணியமர்த்த அனுமதி கோரியிருந்தன.

அதனடிப்படையில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகள் செய்த விளம்பரத்தினால், 20,000 பணியிடங்கள் இந்தியர்களால் நிரப்பப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.