தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க விதையாகி போன ஆயிரமாயிரம் மாவீரர்கள்

ஒரு மக்கள் சமூகம் என்பது பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அதில் அரசியல் இருக்கிறது. சமூக ஒழுங்கு இருக்கிறது. பொருளாதார கட்டமைப்பு இருக்கிறது.

தனித்துவமான பண்பாடு இருக்கிறது. கலாச்சாரம் இருக்கிறது. அவரவர்க்கு தனியே வரலாற்று தொன்மம் இருக்கிறது. இவையாவற்றையும் இருத்திவைக்க உள்ளார்ந்த இறையாண்மை சக்தி இருக்கிறது.

எல்லாவற்றையும் பாதுகாத்து பேணிவளர்த்து ஒழுங்குபடுத்தும் சக்தியாக இந்த உள்ளார்ந்த இறையாண்மையே செயல்படுகிறது.

இந்த உள்ளார்ந்த இறையாண்மை சக்திதான் இந்த நாட்டிலே நம் தேசத்திற்கான உரிமைகளையும் பூரண அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் கேட்டு போராட வைத்தது.

அந்த இறையாண்மையை மீட்டெடுத்து பாதுகாக்கத்தான் ஆயிரமாயிரம் மாவீரர்கள் இம்மண்ணிலே விதையாகி போனார்கள்.

பாரிய அழிவினை சந்தித்து எப்படி மீளப்போகிறோம் என்று தள்ளாடிகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சமூகத்தின் அடிப்படை கூறுகளான அரசியல் பொருளியல் சமூக துறைசார்ந்த சரியானவர்கள் சேர்ந்து இயங்குதலே நம்மை நிலைநிறுத்தும்.

எதிரிகளை வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட நாமே நமக்குள் குற்றம்சாட்டிக் கொண்டும் சண்டையிட்டு கொண்டும் இருப்பதில் பயனேதும் இருக்கப் போவதில்லை.

நம் சொந்த இனத்திலேயே கூட துரோகமும் விரோதமும் இருக்கத்தான் செய்கிறது. அவைகளை கலையென மக்கள்திரளில் இருந்து ஒதுக்கிவிட்டு நாம் செய்யவேண்டியன செய்வோம்.