தனுஷின் ஒபனிங் சாங்க்கு பாடிய தெருக்குரல் அறிவு

நடிகர் தனுஷின் 43 ஆவது படம் மாறன். கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்.மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திர கனி,கிருஷ்ணகுமார் மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகாநத் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஒபனிங் பாடலை தி கேஸ்ட் லேஸ் கலக்டிப் பேண்டில் அறிமுகமாகி, வாத்தி ரைடு, வாய்ஸ் ஆப் யுனிட்டி போன்ற பல பாடல்களை எழுதி பாடிய அறிவு இந்த பாடலை பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் வரிகளில் தனுஷ் உடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது