யாழில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து எரிந்ததால் பரபரப்பு

 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது

யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது.

இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.

இதன்போது வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டது.