இன, மத பிரச்சனைகளை தூண்டிவிடும் சதி நடக்கிறது - பாதிப்படையும் நல்லிணக்கம்!


"நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இன, மத முரண்பாடுகளை அதிகரிக்கும் சதி நடைபெற்று வருகிறது.

ஒருபுறம் சிங்களவர்களையும், தமிழர்களையும் தூண்டிவிட்டு இன ரீதியான பிரச்சினைகளையும், மறுபுறம் பௌத்தர்களையும், இந்துக்களையும் தூண்டிவிட்டு மத ரீதியான பிரச்சனைகளையும் ஆரம்பித்துள்ளார்கள்."

இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

"இன, மத ரீதியாக மக்களை முட்டி மோதவிட்டு நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சதி தீவிரமடைந்துள்ளது.

இந்த இரு பிரச்சினைகளும் ஒருமித்து பேசித் தீர்த்தால் தான் இதற்கு சிறந்த முடிவினை எட்டலாம்.

இல்லையெனில், இவை வடக்கு, கிழக்கை தாண்டி தெற்கிலும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு." என ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.