முல்லைத்தீவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி

முல்லைத்தீவு - மாங்குளம், தச்சடம்பன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியால் பயணித்த குறித்த இளைஞனை வளிமறித்த மற்றுமொரு இளைஞன் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்நிலையில், படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது தாக்குதலில் 27 வயதுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.