கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் தொடரும்-புடின்!

கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, மாநில ஊடக தொலைக்காட்சி ரஷ்யா-24 செய்தி வெளியிட்டுள்ளது.இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இன்று அவர்கள் எங்களை போர்க்களத்தில் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சரி, நான் என்ன சொல்ல முடியும்? அவர்கள் முயற்சி செய்யட்டும்.

கடைசி உக்ரைனியனும் நிற்கும் வரை மேற்குலகம் எங்களுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு ஒரு சோகம். இருப்பினும், எல்லாம் இதை நோக்கிச் செல்வது போல் தெரிகிறது.நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மறுக்கவில்லை. ஆனால், எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்’ என கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புட்டினின் படைகள் கிவ்வைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து, கிழக்கு டான்பாஸ் பகுதி, உக்ரைனில் புடினின் இராணுவ லட்சியத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது.