36வீத வரியை 104ஆக அதிகரித்த அமெரிக்கா : வெடிக்க போகும் பாரிய பூகம்பம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, சீனாவுக்கு எதிராக வரியை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இதன் படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 104வீத வரி விதிக்கப்படவுள்ளது.
இது நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது என  வெள்ளை மாளிகை அறிவித்தது.
 
முன்னதாக சீனாவுக்கு அமெரிக்கா 36 சதவீதம் வரியை விதித்திருந்த நிலையில், அதே சதவீத வரியை சீன ஜனாதிபதியும் அமெரிக்க பொருட்களுக்கு விதித்தார்.

 சீனா இந்த வரியை நீக்கவேண்டும் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. ஆனால் சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், தற்போது அமெரிக்கா வரியை 104வீதமாக உயர்த்தியுள்ளது.
 
"சீனாவின் நடவடிக்கை தவறு. அவர்கள் பதற்றத்தில் முடிவெடுத்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பேச்சுவார்த்தை அவசியம்," என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட் கூறுகையில், "சீனா நியாயமற்ற முறையில் பதிலடி கொடுத்தது. ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் தனது நாட்டின் நலனுக்காக வலுவான முடிவுகளை எடுப்பார். ஆனால், சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது," என்றார்.
 
இந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்திக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புக்கு எதிரொலியாக ஹொலிவுட் திரைப்படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஹொலிவுட்டில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவிக்கின்றன.

அமெரிக்காவை விட சீனாவில் குறிப்பிடதக்க இலாபத்தைப் பெறும் ஹொலிவுட் திரைப்படங்களும் இருந்துவருகின்றன. மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் ஹொலிவுட் திரைப்படங்கள் வெளியாகின்றன.

ஹொலிவுட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10மூ சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது. இதனிடையே ஹொலிவுட் திரைப்படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.