கனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதான டேமியன் சாண்டர்சனின் உடல் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு சந்தேக நபர்களும் சகோதரர்கள் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், ரெஜினா நகரில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சஸ்காட்சுவான், மனிடோபா மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மூன்று மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தலைமறைவாக உள்ள மைல்ஸ் சாண்டர்சனை கைது செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர். கத்திக்குத்து இடம்பெற்ற 13 வௌ;வேறு இடங்களில் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கத்திக்குத்தை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்படாத போதிலும், டேமியன் மற்றும் மைல்ஸ் இருவர் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடாவின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வன்முறைச் செயல்களில் ஒன்றாக பார்க்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், 10பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயமடைந்தனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            