கந்தானையை இன்று காலை உலுக்கிய துப்பாக்கி சூடு : முக்கிய அரசியல்வாதியின் அதிகாரியும் இலக்கு


கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹாரவும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானையில் இன்று (3) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவவரும்  ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
 
மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று பிற்கபகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் உத்தரவை மீறி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.