''தாஜுதினின் சம்பவத்தை மஹிந்த ஆட்சியில் மறைத்தோர் அநுர ஆட்சியில் பதவிகளில்..": அம்பலமான தகவல்



தாஜுதினின் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைக்க முயன்றவர்கள் இந்த அரசாங்கத்தினால் பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமான் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

தாஜுதினின் சம்பவம் தொடர்பில் பி அறிக்கையை தவறாக எழுதியவர்கள் இந்த அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுள்ளனர்.
அத்துடன்த hஜுதினின் சம்பவம்; நடந்த நாளன்று அலரிமாளிகைக்கும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையே நடந்ததொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.

அப்போதிருந்த தொலைபேசி நிறுவனத்தின் தலைவர் அந்த ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருந்தவரே.
அவர்களும் இந்த ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தை போன்று நடந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு இருந்தால் அந்த சம்பவம் தொடர்பில் தேட முடியாது. இப்போது கஜ்சா என்பவர் தொடர்பில் கூறி மறைக்க முடியாது. உண்மைகளை கூற வேண்டும். கடந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த பலர் இந்த அரசாங்கத்தில்இருக்கின்றனர்.
அவர்களின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணிந்துள்ளதா என்றுதெரியவில்லை. இது தொடர்பில் வருங்காலத்தில் தெரியவரும் என்றார்



இதேநேரம் கொழும்பில் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அரசியல் தேவைக்காக அரசியல் தொடர்புகளுடனேயே தாஜூதீனின் சம்பவம் இடம்பெற்றது.
வரலாறு மாறினாலும் தேர்தலில் வெற்றி தோல்விகள் ஏற்பட்டாலும் உண்மையை தொடர்ந்தும் மறைக்க முடியாது.
தாஜூதீன் சம்பவத்தை மறைப்பதற்காக அரச சட்ட மருத்துவ அதிகாரி, சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் மட்டத்திலிருந்த அதிகாரிகள் இணைந்து சதித்திட்டம் தீட்டி அதனை திடீர் விபத்தாகக் காண்பித்தனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் இது தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனை செய்து தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிப்படுத்தியது. ஆனாலும் இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போனது. குற்றவாளிகள் யார் என்பதை பொதுவாக அனைவரும் அறிந்திருந்தாலும், சட்டரீதியாக அவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

தாஜூதீன் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை சாட்சியுடன் நிரூபித்தால் அது மிகவும் பெறுமதிமிக்க ஒரு விடயமாகும். எந்த அரசாங்கமானாலும் இந்தக் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அந்த வரலாற்றை அழிக்கவும் முடியாது. அது மாற்றமும் அடையாது. இந்தக் சம்பவத்துடன்; தொடர்புடைய சாட்சிகளை மறைத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை. எனினும் கொலையாளிகள் உயிருடன் இருந்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

காலதாமதமானாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 20 ஆண்டுகள் ஆனாலும் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. இது தொடர்பில் பதில் பொலிஸ் பேச்சாளர் கூறுவதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.