மகனுடன் தனது சேவையை முடித்துக்கொண்ட சிறிலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானி!


சிறிலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானிகளில் ஒருவரான உத்பல குமாரசிங்க, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது கடைசி விமானத்தை நேற்று எடுத்துச்சென்று தனது சேவையில் இருந்து விடைபெற்றுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் 40 வருடகால நட்சத்திர பணிக்குப் பின்னர், தனது மகன் முதல் அதிகாரி ரஹல் குமாரசிங்கவுடன் இறுதி விமானத்தை இயக்கி விடைபெற்றுள்ளார்.

இறுதி விமானமான UL 138 மதுரையிலிருந்து கொழும்புக்கு பயணித்து நேற்று (31) பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தனது கடைசி விமானத்திற்கு துணை விமானியாக தனது மகன் ரஹல் குமாரசிங்கவை அழைத்துச் சென்றுள்ளமையும் சிறப்பு அம்சமாகும்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய ஓடுபாதையில் "நீர் வணக்கம்" செலுத்தி இந்த விமானத்தை வரவேற்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்தநிலையில், 1979 ஆம் ஆண்டு உதவி செயற்பாட்டு அதிகாரியாக சேவையில் இணைந்த உத்பலா குமாரசிங்க, 44 வருட சேவையின் பின்னர் சிறிலங்கன் எயார்லைன்ஸின் மிக மூத்த விமானிகளில் ஒருவராக ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.