அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்பு அண்மைக்கால வரலாற்றில் அதிகரிக்கப்படாத பாரிய அதிகரிப்பாகும். 9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
அரச சேவையில் இணைந்துகொள்ளும் ஒருவருக்கு இதுவரை வழங்கப்படும் அடிப்படைச்சம்பளம் 24250 ரூபாவாகும். அதனையே தற்போது 40ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்கிறது. அதன் பிரகாரம் அவர்களின் அடிப்படைச்சம்பளம் 15750 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கு வாழ்க்கைச்செலவு கொடுப்பனவாக வழங்கப்படும் 17800ரூபாவும் அதிகரிக்கப்படுகிறது.
அதேபோன்று கிராம சேவை உத்தியோகத்தருக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படைச சம்பளம் 28940 ரூபாவாகும். வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் அவர்களின் அடிப்படைச்சம்பளம் 3 வருடங்களில் 50630 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் அடிப்படைச்சம்பளத்துக்கு 21690 ரூபா அதிகரிக்கப்படுகிறது. இதற்கு வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 17500ரூபாவும் அதிகரிக்கப்படுகிறது.
மேலும் வைத்திய சேவையில் தற்போது இணைந்துகொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படைச்சம்பளம் 54290 ரூபாவாகும். அது இந்த வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பின் மூலம் 91750 ரூபாவாக அதிகரிக்கிறது. அவர்களின் மேலதிக நேர கொடுப்பனவு இதுவரை 687 ரூபா ஒரு மணித்தியாலத்துக்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் அது 764 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
அபிவிருத்தி அதிகாரி ஒருவரின் அடிப்படைச்சம்பளம் தற்போது 37260 ரூபாவாகும். அவர்களின் அடிப்படைச்சம்பளம் 63640 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்த துறைக்கு புதிதாக இணைந்துகொள்பவருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 10606 ரூபா அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அரச துறையின் அனைத்து தரப்பினரின் அடிப்படைச்சம்பளம் அவர்களின் சேவை காலத்தின் பிரகாரம் அதிகரிக்கப்படுகிறது.
என்றாலும் இதனை சரியாக புரிந்துகொள்ளாத சிலர் இதுதொடர்பில் விமர்சனங்களை தெரிவித்து வருவதை காண்கிறோம்.
அந்த விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்வதில்லை. இது எங்களுக்கு பழக்கப்பட்டதாகும். அடுத்துவரும் 5 வருடங்களில் நாட்டை கட்டியெழுப்பாமல் திரும்பிப்பார்ப்பதில்லை
மேலும் ஆசிரியர் சேவையில் தற்போது இணையும் ஒருவரின் அடிப்படைச்சம்பளம் 31490 ரூபாவாகும். ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு 39211 ரூபா கிடைக்கிறது. 3வருடங்களில்53060 ரூபாவாக அடிப்படைச்சம்பளம் அதிகரிக்கப்படுகிறது.
5வருட சேவையில் உள்ள ஆசிரியரின் சம்பள அதிகரிப்பு 8253 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
இதுவல்லாமல் ஏனைய கொடுப்பனவுகளும் கிடைக்கிறது. அது மாத்திரமல்லாது ஏப்ரல் 1ஆம் திகதிக்கு ஆசிரியரட சேவையில் இணைந்துகொள்ளப்படும் 3(1) பட்டதாரி ஆசிரியருக்கு 50ஆயிரத்தி 20 ரூபா அடிப்படை சம்பளமாக கிடைக்கிறது. அதற்கு ஏனைய கொடுப்பனவுகளும் அடங்குகிறது.
5 வருட சேவையில் உள்ள பட்டதாரிக்கு 8982 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
அதேபோன்று 2 ஆம் நிலைய ஆசிரியர்சேவையை சேர்ந்த ஒருவருக்கு தற்போது கிடைப்பது 39175 ரூபாவாகும் 3வருடங்களில் அது 66880ரூபாவாக அதிகரிக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இவர்களுக்கு 56236 ரூபா அடிப்படை சம்பளமாக கிடைப்பதுடன் ஏனைய கொடுப்பனவுகளுடன் 73350 ரூபா கிடைக்கிறது. அவர் இந்த தரத்தில் 5 வருடம் சேவையில் இருப்பவராக இருந்தால் அவருக்கு 10559 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது.
ஆசிரியர் சேவையில் 2(1) ஆசிரியர் ஒருவரின் தற்போதுள்ள அடிப்படைச்சம்பளம் 47425 ரூபா. அவர்களின் சம்பளம் 81780 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.
அவருக்கு ஏப்ரல் முதலாம் திகதி 66481 ரூபா கிடைப்பதுடன் அதற்கு மேலும் 17800 ரூபாவுடன் சுமார் 83ஆயிரம் ரூபா கிடைக்கிறது. அவர் 5வருட சேவையை பூரணப்படுத்தி இருந்தால் அவருக்கு ஏப்ரல் முதலாம் திகதி 13154 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
முதலாம் தரத்தில் இருக்கும் ஆசிரியரின் தற்போதைய சம்பளம் 56770ரூபா அது 3வருடங்களில் 98580 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இவருக்கு 13793 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது. இந்த தரத்தில் 5வருட சேவையை பூர்த்தியாகினால் 15578 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
ஏப்ரல் முதலாம் திகதி இவர்களுக்கு 78063 ரூபாவுடன் மேலும் 17ஆயிரத்தி 800 ரூபா கிடைக்கிறது.
அதேபோன்று அதிபர் சேவையில் 3ஆம் தரத்தில் இருப்பவருக்கு தற்போது 42175 ருபா அடிப்படைச் சம்பளமாக கிடைக்கிறது அது 72280 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
ஏப்ரல் முதலாம் திகதிக்கு இவர்களின் அடிப்படைச்சம்பளம் 52456 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. 10ஆயிரத்தி 81 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது. இந்த தரத்தில் 5 வருட சேவையுடைய அதிபருக்கு 11391 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
அதிபர் சேவை2 இல் தற்போதுள்ள ஆரம்ப சம்பளம் 48685 ரூபா அது 86370 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
அவருக்கு ஏப்ரல் மாதம் 61240 ரூபாவுடன் 17800 ரூபா கிடைக்கிறது. அதிபர் சேவை முதலாம் தரத்தில் தற்போதுள்ளஅடிப்படைச் சம்பளம் 58345 ரூபா அது 3வருடத்தில் ஒரு இலட்சத்து 3740 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
ஏப்ரல் முதலாம் திகதி இந்த அதிபர்களின் அடிப்படைச்சம்பளம் 73273 ரூபாவுடன் 17800 ரூபா கிடைக்கிறது. அவரின் சம்பள அதிகரிப்பு 14868 ரூபாவாகும். 5வருட சேவையை பூர்த்திசெய்தவரின் சம்பள அதிகரிப்பு 16848 ரூபாவாகும் என்றார்.