ரஷ்யா - மொாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆடம்பர லிமோசின் கார் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் அவருடைய பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புடினின் வெளிநடப்பு விவகாரங்களுக்கும் அதிவுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமாதான பேச்சுவார்த்தைகளின் நகர்வில் ரஷ்யா - உக்ரைன் தரப்புக்கள் சாதகமான முடிவை வெளிப்படுத்தாத நிலையில் இரு தரப்புக்குமான தாக்குதல் நகர்வுகள் வலுபெற்று வருகின்றன.
சமாதான பேச்சுவார்த்தை
இந்த விடயம் சமாதான பேச்சுவார்த்தைக்கு இருதரப்புக்கும் அழைப்பு விடுத்த அமெரிக்காவுக்கு பெரும் சாலாக மாறியுள்ளது.
இந்நிலையிலேயே ரஷ்யா - மொாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆடம்பர லிமோசின் கார் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வெடிப்பு சம்பவமானது அந்நாட்டு பாதுகாப்பு தலைமையகத்திற்கு( FSB) அருகே இடம்பெற்றுள்ளது.
இந்த ஆடம்பர கார் புடினின் வாகன தொடரனிக்கு சொந்தமானது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரிய ஜனாதிபதி
இந்த கார் புடினின் நெருங்கிய சகாவான வடகொரிய ஜனாதிபதியினால் பரிசலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரிடம் விசாரணை நடத்த புடின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் இராணுவம் வலுவான தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் ஒரே நேரத்தில் ட்ரோன்கள், பீரங்கிகள் மற்றும் வீரர்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது