சீனாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா!

சீனா தனது மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை எதிர்த்து போராடி வருகின்றது.சீனா தற்போது கொவிட் தொற்றின் ஓமிக்ரோன் பிஏ.2 துணை மாறுபாட்டின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றது.இந்தநிலையில், சீனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையை பதிவுசெய்தது.சீனாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,280 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன,.2022ஆம் ஆண்டு தொற்றுகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை இப்போது வடகிழக்கு மாகாணமான ஜிலினில் பதிவு செய்யப்பட்டுள்ளன.1,87,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஜிலின், அதன் 24.1 மில்லியன் குடியிருப்பாளர்கள் மாகாணத்திற்கு வெளியே அல்லது மாகாணத்திற்குள் அல்லது மாகாணத்திற்குள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.சமீபத்திய சாதனை எழுச்சி, 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தொழில்நுட்ப மையமான ஷென்சென் உட்பட குறைந்தது 10 நகரங்களையும் மாவட்டங்களையும் முடக்கநிலைக்குள் வைக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்தியுள்ளது.ஹைடெக் ஷென்சென் நகரம், அனைத்து இடங்களுக்கும் சீல் வைத்துள்ளது மற்றும் சமீபத்திய கொவிட்-19 பரவலால் திங்கள் முதல் ஞாயிறு வரை பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.சீனா தனது கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன