ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்...!


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முத்துநகர் பிரதேசத்திலுள்ள 800 ஏக்கர் விவசாயநிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து முத்துநகர் விவசாயிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்;.

 இதன்போது, போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.
 
 "முத்துநகரில் 1972ஆம் ஆண்டு முதல் நாம் விவசாயம் செய்து வருகிறோம். 352 குடும்பங்கள் 5000 பேரின் வாழ்வாதாரம் இந்த நிலங்களிலேயே தங்கியுள்ளன.

நாங்கள் இது தொடர்பில் திருகோணமலையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பிரச்சினை தொடர்பில் தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை" என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.