ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியாகியதை அடுத்தும் மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்ட சொத்து விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன..
1. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன
காணி மற்றும் வீடுகள் - 70,000,000 ரூபாய்
தங்கநகைகள் - 3,358,800 ரூபாய்
வாகனங்கள் - 7,000,000 ரூபாய்
அவுஸ்திரேலிய டொலர் - 4,500
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,100,214 ரூபாய்
Binance கணக்கு - USDT 1,850
Commonwealth வங்கி - 42.20 அவுஸ்திரேலிய டொலர்
மொத்த சொத்து மதிப்பு - 83,459,014 ரூபாய்
2. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
காணி மற்றும் வீடுகள் - 1,000,000 ரூபாய் ( 44 பேர்ச்சஸ் காணி மற்றும் 1 வீடு உண்டு எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை) தங்க நகைகள் - 400,000 ரூபாய்
வாகனங்கள்- 1,400,000 ரூபாய் ( கட்சி ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட கெப் ரக வாகனம் எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,476,088 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு - 6,276,088 ரூபாய்
3. பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன
காணி மற்றும் வீடுகள் - 1/4 ஏக்கர் காணி மற்றும் வீடு உண்டு எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை
தங்க நகைகள் - 500,000 ரூபாய்
வாகனங்கள்- விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 7,758,999 ரூபாய்
4. அமைச்சர் ஆனந்த விஜேபால
காணி மற்றும் வீடுகள் - 10,000,000 ரூபாய்
தங்க நகைகள் - விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை
வாகனங்கள்- 6,900,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 17,940,281 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு - 34,840,281 ரூபாய்
5. அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ்
காணி மற்றும் வீடுகள் - 16,000,000 ரூபாய்
தங்க நகைகள்- 2,500,000 ரூபாய்
வாகனங்கள் - 5,400,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 8,339,520 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு - 32,239,520 ரூபாய்
6. பிரதி அமைச்சர் நளின் ஹேவகே
காணி மற்றும் வீடுகள் - 2,400,000 ரூபாய்
தங்க நகைகள்- 480,000 ரூபாய்
வாகனங்கள் - 160,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 2,268,639 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு - 5,308,639 ரூபாய்
7. நிலந்தி கொட்டஹச்சி எம்.பி
காணி மற்றும் வீடுகள் - 9,000,000 ரூபாய்
தங்க நகைகள்- 6,000,000 ரூபாய்
வாகனங்கள் - 7,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 7,144,257 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு - 29,144,257 ரூபாய்
8. தயாசிறி தயசேகர எம்.பி
காணி மற்றும் வீடுகள் - 11,315,000 ரூபாய்
தங்க நகைகள்- 1,300,000 ரூபாய்
வாகனங்கள் - 3,000,000 ரூபாய் ( மேலதிகமாக 2 ஜீப் ரக வாகனங்கள் )
வர்த்தக பங்குகள் - பத்திரங்கள் மற்றும் வர்த்தக பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 2,891,073 ( நிலையான , சேமிப்பு மற்றும் கூட்டு கணக்குகள் உள்ளபோதிலும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
9. சாமர சம்பத் தசநாயக்க எம்.பி
காணி மற்றும் வீடுகள் - 265,490,000 ரூபாய்
வாகனங்கள் - 16,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் - 3,396,586 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு - 285,886,586 ரூபாய்
10. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
2025 ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை