நாட்டில் சட்டென குறைந்த தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 01 இலட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 01 இலட்சத்து 58 ஆயிரத்து 300 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.அத்துடன், நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 01 இலட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.