இளைஞனை தாக்கி காலை முறித்த பொலிஸார் : யாழில் பரபரப்பு

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில்,

இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் வழங்கியுள்ள முறைப்பாட்டில்” நான் சைக்கிளில் புத்தூருக்கு  சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த அச்சுவேலி பொலிஸார் என்னை நிற்குமாறு கூறினர்.

நான், ஏன் எனக்  கேட்ட போது எனது முகத்தில் தாக்கிவிட்டு  ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை எனக் கேட்டார்கள். அப்போது நான் காய்ச்சல் காரணமாக வரவில்லை எனத் தெரிவிக்க மீண்டும் என்னை தாக்கினார்கள். நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னைக் கடுமையாகத் தாக்கிவிட்டு என்னை  வீசி விட்டுச் சென்றுவிட்டார்கள்.

இதனையடுத்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன். தற்போது எனது ஒரு கால் முறிந்துள்ளது. என்னை தாக்கிய பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.