காசா பகுதியில் உணவு பஞ்சம் கடுமையாக உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் ஒரு வேளை உணவுக்காக கூட போராடுகின்றனர்.
காசா பகுதி முழுவதும் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விமானம் மூலம் வீசப்படும் உணவுப்பொருட்களை சேகரிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஓடும் காட்சி காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியால் காசா எல்லை பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மேலும் உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை உணர்ந்த சில நாடுகள் விமானம் மூலம் உணவுப்பொருள் அடங்கிய மூட்டைகளை பாராசூட் உதவியுடன் மேலிருந்து வீசிகின்றன.
இதற்காகவே நீண்ட நாட்கள் காத்திருக்கும் மக்கள் உணவை சேகரிக்க உயிர் போராட்டமே நடத்துகின்றனர்.
தனது குழந்தை இரண்டு நாள் பட்டினியாக கிடப்பதாகவும், தான் சேகரித்த உணவை என்னை தள்ளிவிட்டு மற்றொருவர் எடுத்துச்சென்றுவிட்டதாகவும் பெண் ஒருவர் கூறும் காட்சி மனதை உருக்க வைக்கின்றது.
இதேநேரம் இஸ்ரேல் - காசா இடையேயான போர் பல மாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரை உடனடியாக நிறுத்த உலக நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன
இந்த போர் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்று இஸ்ரேல் தெரிவித்து வந்தாலும், பெருமளவில் பாலஸ்தீன் பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். போரால், பல லட்சக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது இதுவரை 60,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அந்த பிராந்தியத்தில் போர் காரணமாக கடும் பஞ்சமான சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போர் சூழல் காரணமாக சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கடும் அழுத்தத்தை தெரிவித்து வருகின்றன.