மொட்டிலிருந்து வந்தவர்கள் ரணிலைக் கைவிட்டு மீண்டும் மஹிந்தவிடம் தாவல்



கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த பல முக்கிய தலைவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, அகில எல்லாவல, கருணாதாச கொடிதுவக்கு, உபுல் மகேந்திர ராஜபக்ச ஆகியோர் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளனர்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்வதற்காக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றி வருவதாகவும் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தலைமைக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீண்டும் சொந்த கட்சிக்கே திரும்பியுள்ள போதும், பலர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன பலய கட்சியில் இணைந்துள்ளமை குறிப்  பிடத்தக்கது.