இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் இரத்து..!

பாகிஸ்தானின் முக்கியமான உட்கட்டமைப்பு திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான ரயில்வே திட்டத்திலிருந்து சீனா திடீரென விலகியுள்ளது. 

இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தியாவிடம் ஏற்பட்ட புதிய நட்பு காரணமாக பாகிஸ்தானிடம் இருந்து சீனா விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் கீழ் லாகூர்-பெஷாவர் ரயில்வே பாதையை மேம்படுத்தும் திட்டத்திற்கு சீனா நிதியுதவி வழங்குவதாக இருந்தது.

 இந்த திட்டத்திற்கான நிதியை வழங்க முடியாது என்று சீனா தற்போது கைவிரித்துள்ளது. இது பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத ஒன்று.
 
சீனாவின் இந்த விலகலால், பாகிஸ்தான் இந்த திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 2 பில்லியன் டோலர் கடன் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 
பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வந்த ஆதரவு குறைந்திருக்கும் நிலையில், இந்தியா-சீனா இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிகழ்வு, ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை உணர்த்துவதாக உள்ளது.