மீண்டும் உருவாகும் புதிய சீன வைரஸ்-35 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது புதிய வைரஸ் சீனாவில் உருவாகியுள்ளது.சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் இதுவரை அந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மிருகங்களிடமிருந்து மனிதர்களின் உடல்களில் உருமாறித் தாவிய ‘லாங்யா ஹெனிபா வைரஸ்’ என்ற புதிய தீநுண்மி, சீனாவில் பரவி வருவதாக தாய்வான் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.இந்தத் தீநுண்மியின் பரவும் திறன் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது என்று அந்த மையம் கூறியுள்ளது.

கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.எனினும் இந்த வைரஸ் மனிதர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது அல்ல என்றும் கூறுகின்றனர்.