ஹொங்கொங்கில் அமைக்கப்பட்ட கடைசி பொது நினைவிடமும் மறைப்பு!

தியனன்மென் போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு ஹொங்கொங்கில் அமைக்கப்பட்ட கடைசி பொது நினைவிடமும் மறைக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் சீன அதிகாரிகளால் கொல்லப்பட்ட ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி நடைபாதையில் எழுத்துக்களால் வரையப்பட்டது.இந்நிலையில் நேற்று சனிக்கிழமையன்று உலோகத்தால் மூடப்பட்டிருந்ததோடு இது வழக்கமான பராமரிப்பு வேலைகளுக்காக மூடப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.ஆனால் ஹொங்கொங்கில் அரசியல் கருத்து வேறுபாடுகளை பெய்ஜிங் அதிகளவில் ஒடுக்கி வரும் நிலையில் அது அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.தியனன்மென் போராட்டங்களை பொதுவில் நினைவுகூர அனுமதித்த சீனாவின் சில இடங்களில் ஹொங்கொங்கும் ஒன்றாகும்.அதிக அரசியல் சுதந்திரங்களுக்கு அழைப்பு விடுக்கும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே தியனன்மென் சதுக்கப் படுகொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.