இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு...!


சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ப்ளூம்பெர்க் இணையத்தளம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சமீபத்திய தரவுகளை, நிலையான பட்டய மூலோபாய தகவல்களை மேற்கோள் காட்டி அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளது.

இலங்கை கடன் செலுத்தத் தவறிய 12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பத்திரங்களை மறுசீரமைப்பதற்கு முதலீட்டாளர்களுடன் இலங்கை மே மாத நடுப்பகுதியில் உடன்படிக்கைக்கு வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பாக பத்திரப்பதிவுதாரர்களின் பிரதிநிதிகள் குழுவுடன் ஆரம்பமான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் அடுத்த சில வாரங்களில் இலங்கை மீண்டும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என டீடழழஅடிநசப இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் தொடர்புடைய "மேக்ரோ-இணைக்கப்பட்ட பத்திரங்கள்" தொடர்பாக சர்வதேச பத்திரம் வைத்திருப்பவர்களுடன் இலங்கையால் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.