வேல்ஸில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த ரயில் கட்டண உயர்வு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ரயில் பயணிகள், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த ரயில் கட்டண உயர்வை எதிர்கொள்கின்றனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணங்கள் 3.8 சதவீதம் வரை உயரும்.இதுவொரு மிருகத்தனமான உயர்வு என்று தொழிற்கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அதிகரிப்பு, பணவீக்க வீதத்தை விட குறைவாக இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.பணவீக்கத்தின் தற்போதைய சில்லறை விலைக் குறியீடு அளவீடு 7.8 சதவீதமாக உள்ளது.கடந்த ஜூலை மாதத்தின் சில்லறை விலைக் குறியீடு அளவீடு பணவீக்க வீதத்தின் அடிப்படையில் ரயில் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் அதன் வழக்கமான சில்லறை விலைக் குறியீடு அளவீடு மற்றும் 1 சதவீதம் என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தியிருந்தால் ரயில் கட்டண உயர்வு 3.8 சதவீதம் வரை அதிகமாக இருந்திருக்கும்.ஆயினும் கூட, செவ்வாய்க்கிழமை உயர்வு ஜனவரி 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு செங்குத்தான அதிகரிப்பு என்று தொழில்துறை அமைப்பான ரயில் விநியோக குழுவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்தின் வாழ்க்கைச் செலவு 30 ஆண்டுகளாக மிக வேகமாக உயர்ந்து வரும் நேரத்தில், வீதம் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.