சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கின் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு வலுச்சேர்ப்போம் வாரீர் ” என்ற தொனியில் குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி இந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி, ஊர்திப் பவனியுடன் தமது போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.
அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம் நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.