ஹமாஸ் கடத்திய பயணக்கைதிகளில் பாட்டி,பேத்தி சடலங்களாக மீட்பு


கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகளில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

80 வயதான கார்மெலா டான் மற்றும் அவரது 12 வயது பேத்தி நோயா டான் ஆகியோர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எனினும் அவர்களது சடலங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

X பதிவில் அவர் வெளியிட்ட ஒரு செய்தியில், "நோயா மற்றும் அவரது பாட்டி கார்மேலாவின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த கவலை அடைகிறோம்.

"அவர்களை வீட்டிற்கு அழைத்து வர உதவிய அவரது கதையைப் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன." என தெரிவித்துள்ளார்.