ஓடிடியில் வெளியாகவுள்ள டாணாக்காரன்!

நடிகர் விக்ரம் பிரபு  நடிப்பில் உருவாகியுள்ள ”டாணாக்காரன்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.பொலிஸ் பயிற்சியின் போது நடக்கும் அவலங்கள் குறித்து இந்த படம் பேச உள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.