யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த தனியாரின் காணிகள் அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டன.
பெரும்பாலான காணி உரிமையாளர்கள் வெளி பிரதேசங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வருவதால் அவர்களால் உடனேயே அக்காணிகளுக்குள் குடியமர முடியவில்லை.
அதனை தமக்கு சாதகமாக பய்னபடுத்திக்கொண்டுள்ள கொள்ளையர்கள், அந்த காணிகளுக்குள் புகுந்து வீடுகளை உடைத்து இரும்புகள் , கதவுகள் , கதவு நிலைகள் என்பவற்றை களவாடி செல்கின்றனர்.
அத்துடன் பெறுமதியான மரங்களையும் தறித்து எடுத்து செல்கின்றனர்.
இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மற்றும் பொலிசாரிடம் அறிவித்தும் கொள்ளையர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வொயிஸ்
இதேநேரம் தனது நிலத்தில் உள்ள வீடு கிணறு என்று ஒன்றுமே இல்லை என வயோதிப பெண் ஒருவர் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்தார்;
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            