உக்ரைன் அதிபரின் இல்லத்திற்கு முன் படமாக்கப்பட்ட பாடலுக்கு கிடைத்த விருதுRRR தெலுங்கு திரைப்படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவின் முதல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

இந்த பாடல் 2021 இல் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் படமாக்கப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதை ஏற்றுக்கொண்ட இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலின் வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல இந்தியர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.