பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் புகழுடல் தாங்கிய பேழை! காணொளி வெளியானது..

மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் மரணத்தை உறுதிபடுத்தும் மற்றும் உடலை சவப் பெட்டியில் வைக்கும் மண சடங்குகளின் காணொளி வெளியாகியுள்ளது. 

கத்தோலிக்க திருச்சபையின் தற்காலிக தலைவரான கர்தினால் கெவின் ஃபாரெல், பாப்பரசர் பிரான்சிஸின் உடலை சவப்பெட்டியில் அடக்கம் செய்யும் சடங்கிற்கு தலைமை தாங்கினார்.

மரண சடங்குகள் 

வத்திக்கானின் காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் இந்த சடங்கில் நடைபெற்றது.

இந்த மரண சடங்கில் கர்தினால்கள் கல்லூரியின் மூத்த கர்தினால் ஜியோவானி பாட்டிஸ்டா ரே மற்றும் மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் குடும்ப உறுப்பினர்கள், சுகாதார இயக்குநரகத்தின் இயக்குநரும் துணை இயக்குநருமான வைத்தியர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி மற்றும் வைத்தியர் லூய்கி கார்போன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த சடங்குகள் இடம்பெற்ற காணொளியை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி சடங்குகள் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

The ark bearing the praises of the Holy Pope Francis! The video was released.