இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33 ஆவது மனித புதைகுழி! அவசரமாக பறந்த கடிதம்


முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர் ஆகியோருக்கு நாடு கடந்த தமிமீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க்,( Mr. Volker Turk)ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ (Mr. Juan Pablo Alban Alencastro) ஆகியோருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கடிதங்களை தனித்தனியாக அனுப்பியுள்ளது.

முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அதற்கு அங்கு விஜயம் செய்து கையகப்படுத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

அகழ்வுப்பணி தொடர்ந்தும் நடைபெறுகையில் அதன் நடைமுறையையும், சர்வதேசக் குற்றங்களுக்கான ஆதாரத்தை நேர்மையாக பாதுகாக்கும் வகையில் அவசர கோரிக்கைகளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கடிதங்களை எழுதியுள்ளார்.