சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இலங்கை நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை வந்தடைந்தார்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.
ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற முறையில் கடல் பகுதியில் விண்கலம் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர்.
சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.
டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறையாகும். அப்போது விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. இதன்போது டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்துள்ளன.
சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதன்போது விண்கலம் சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் பாரசூட்கள் உதவியுடன் படிப்படியாக குறைத்து கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பாதுகாப்பாக கடற்கரைக்கு எடுத்து வந்தன.
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டொல்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது நாசாவின் கேமராக்கள் காட்டின. அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர்.
இதனையடுத்து நான்கு விண்வெளி வீரர்களும் படிப்படியாக டிராகன் விண்கலத்தில் இருந்து வெளிவந்து, புதிய காற்றை முதன்முதலில் சுவாசித்தனர். பூமியின் ஈர்ப்பு விசையின் எடை அவர்களின் பலவீனமான உடல்களில் அழுத்தப்பட்டதால், மீட்புக் குழுவினர் அவர்களை ஸ்ட்ரெச்சர்களில் ஏற்றிச் செல்ல உதவினார்கள்.
அவர்கள் இன்னும் பல நாட்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள அவர்களது பணியாளர் குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
நாசாவின் சிறப்பு நிபுணர்களால் அவர்களுக்கு பாதிப்பில்லை என அனுமதி வழங்கப்பட்டால், 286 நாட்களுக்கு பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அவர்கள் வீடு திரும்ப முடியும்.
நீண்ட 17 மணி நேரப் பயணத்திற்கு பின்னர் அவர்கள் பூமிக்கு திரும்பியிருந்தாலும், விண்வெளியில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அவர்கள் மீள்வதற்கான மிகக் கடுமையான பாதையை அவர்கள் தெரிவு செய்தாக வேண்டும்.
குறைந்த ஈர்ப்பு விசையில் பல மாதங்கள் கழித்த நிலையில், மீண்டும் தங்கள் வலிமையை மீட்டெடுக்க அவர்கள் வாரக்கணக்கில் உடல் சிகிச்சையைத் தாங்க வேண்டியிருக்கும் என நிபுணர்கள் தெரிவித்தள்ளனர்..