இலங்கை துறைமுக அதிகார சபையினுள் பதற்ற நிலை


அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ளன.

இன்றைய தினம் (15.03.2023) முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பில் இலங்கை துறைமுக அதிகார சபை உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை துறைமுக அதிகார சபை தலைவருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் ஒரு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், அங்கு சற்று பதற்ற நிலை உருவாகியுள்ளது.