உருவாகிய முறுகல் நிலை: களுத்துறையில் படையினர் துப்பாக்கி பிரயோகம்

களுத்துறை, மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று முன் தினம் கிளிநொச்சி விசுவமடு பகுதியிலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.