இலங்கை மீது திணிக்கப்படவுள்ள வரிகள் - நாட்டு மக்களுக்கு பேரிடி..!


சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கும் யோசனைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று (20.03.2023) அனுமதி வழங்கியிருந்ததை அடுத்தே பொருளாதார ஆய்வாளர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான கடன் வசதியை இலங்கை பெற்றதால் மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கைக்கு சுமார் 2.9 பில்லியன் டொலர் கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.