அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் - அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!



அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். 

இது தொடர்பில் மேலம் தெரியவருகையில், 

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் ஹெட்ஜ் நிதி நிறுவுனர் ராஜ் ராஜரத்தினம் தற்போது சிறிலங்கா வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், அவர் எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர் 2009 ஆம் ஆண்டில், உள் வர்த்தகப் பத்திர மோசடிகளில் குற்றவியல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சில வருடங்கள் சிறைப்படுத்தலின் பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும் தாம் குற்றமற்றவர் என்று கூறி அவர் அண்மையில் 'சீரற்ற நீதி' (uneven Justice) என்ற நூலை வெளியிட்டிருந்தார். 

இதேவேளை தமிழர் புனர்வாழ்வு அமைப்புக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அதிகாரம் இன்றி கிருலப்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட் வங்கிக் கிளையில் வைப்பு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துடன் ராஜரத்தினம் தொடர்புபட்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பெயர் இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் இணைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி பணச் சலவை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கருணாநாயக்க பின்னர் விடுவிக்கப்பட்டார்.