தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரமே பெரிய சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தபடுவது ரணிலுக்கோ, சஜித்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆதரவை வழங்வதற்காக அல்ல. இதில் ரணிலுக்கா என்று கூறுவது முற்றிலும் தவறானது.
அதேவேளை இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை கைவிடச் சொல்லி தூதரகங்களின் அழுத்தம் ஏதும் இல்லை.
இந்திய தரப்பின் அழுத்தங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்னுடன் இப்படிபட்ட விசயங்களை அவர்கள் கதைப்பது குறைவு. ஏதாவது கலாச்சாரம், சமயம் ரீதியாக தான் கதைப்பார்கள். இப்படிபட்ட விடயங்களை கதைப்பது குறைவு. அதனால் இதைப்பற்றி எனக்கு தெரியாது.
ஆனால் சுமந்திரன் தான் இப்ப பெரிய சத்தம் எல்லாம் போட்டு கொண்டிருக்கிறார். அதாவது தாங்கள் எப்படியாவது பொதுவேட்பாளர் நியமிப்பதை நிறுத்துவோம் என்றும் தங்களை துரோகி என்று சொன்னாலும் பயப்படபோவதில்லை என்றெல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறார்.
இதனைவிட தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டாமென வேறுஅழுத்தங்கள் வரவில்லை. ஆனால் சிங்கள வேட்பாளர்களிடையே ஒருவிதமான அச்சமும் பயமும் அருவருப்பும் வந்திருப்பதாக தெரிகிறது என தெரிவித்தார்.
இதேநேரம் தமிழ் பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு தங்களுடைய பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தங்களுடைய கட்சி பிரபல்யமாகலாம் என ஒரு சிலர் இருக்கின்றார்கள். இன்னும் ஒரு சிலர் இதை பணம் உழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
எடுக்கவில்லை நாங்கள் இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை ஆனால் கட்சியாக பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை அடுத்தடுத்த மத்திய குழு கூட்டங்களிலே நாங்கள் தீர்மானம் எடுப்போம் என நினைக்கின்றேன்.
மக்களுக்கு சாதகமான சூழல் வந்து பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் இது ஏனென்று சொன்னால் சிவில் சமூக அமைப்புக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை பற்றி சிந்திப்பதை நான் ஒரு காலமும் குறைவு சொல்லவில்லை.
ஏனென்றால் மக்களுக்கும் அதிருப்தி சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் அதிருப்தி நாங்கள் எத்தனை அரசாங்கத்துடன் பேசுவது எத்தனை காலத்திற்கு ஏமாறுவது என்கின்ற வழியில் அவர்கள் செல்லலாம் அது அவர்களது ஜனநாயக உரிமை நாங்கள் அதனை மறக்க முடியாது அவர்களை குறை கூறவும் முடியாது.
ஆனால் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக நாங்கள் மக்களுடைய எதிர்காலத்தை கருதி நல்ல விடயங்களை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
பொது வேட்பாளர் என்கின்ற விடயம் ஊடாக எமது மக்களுக்கு உதாரணமாக சர்வதேச நாடு மத்தியஸ்தம் வகித்து அரசாங்கத்துடன் பேசி நாங்கள் சில ஒப்பந்தங்களை செய்யலாம் என்று பல சர்வதேச நாடுகளுடன் பேசிய போது அவர்கள் கூறுகின்றார்கள் ஒப்பந்தம் செய்துவிட்டு இலங்கை அரசாங்கம் செய்யாவிட்டால் நாங்கள் ராணுவத்தை கொண்டு வந்து அவர்களை கட்டுப்படுத்தலாமா? என்கின்ற கேள்வி எங்களிடம் கேட்கின்றார்கள்.
அவ்வாறான ஒரு நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட விடயம் தொடர்பாக சில அரசியல்வாதிகள் அவதானமாக இருக்க வேண்டும் மக்கள் ஒரு சிலர் இந்த பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு தங்களுடைய பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தங்களுடைய கட்சி பிரபல்யமாகலாம் என ஒரு சிலர் இருக்கின்றார்கள் இன்னும் ஒரு சிலர் இதை பணம் உழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றார்கள் இன்னும் ஒரு சிலர் அவர்களுக்கு என்ன தேவை என்றே தெரியாது ஒரு நாள் கூறுகின்றார்கள் ஜனாதிபதியினுடைய காலத்தை நீடிக்க வேண்டுமென்று இன்னும் ஒரு நாள் கூறுகின்றார்கள் இந்த ஜனாதிபதி இல்லாமல் இன்னும் ஒரு நல்ல ஜனாதிபதி வேண்டும் என்கின்றார்கள் இன்னும் ஒரு நாள் கூறுகின்றார்கள் பொது வேட்பாளர் என்கின்றார்கள் இதில் இரண்டாவது வாக்கை பயன்படுத்த வேண்டும் என்கின்றார்கள் என்ன நடப்பது என்பது ஒரு சுய சிந்தனை செய்யக்கூடிய அளவிற்கு மனநிலை இல்லாதவர்களும் இந்த கைச்சாற்றில் இருக்கின்றார்களா என்கின்ற சந்தேகம் இருக்கின்றது.