அருள் நிதியின் தேஜாவு டீசர்

தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்றவர் நடிகர் அருள்நிதி. இவர் தற்போது 'தேஜாவு' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி திரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.தேஜாவு படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். இதன்  படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரை படக்குழுவினர் தற்போது  வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.