துருவங்கள் பதினாறு, மாபியா ,நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் மாறன் படத்தை இயக்குகிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கின்றார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இவர் நடிக்கும் 3 றாவது தமிழ் படம் இதுவாகும். ஸ்ருமிதி வெங்கட்,சமுத்திரக்கனி , கிருஷ்ணா குமார் ,மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேகானந்த சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            