திரையரங்கில் வெளிவருமா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்!

கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று, மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில், குறிப்பிட்ட ஒரு காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது என்று கூறி, பா.ம.க கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.நடிகர் சூர்யாவிற்கு எதிர்காக பல வன்முறைகளும் நடத்தப்பட்டது. இதன்பின், அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். ஆனால், இந்த பிரச்சனையின் காரணமாக, தங்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறி, பா.ம.க கட்சி தீடீரென அதிர்ச்சியளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.ஜெய் பீம் படத்தின் மூலம் வன்னியர் சமுதாயத்தை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டியதற்காக, நடிகர் சூர்யா இதுவரை தங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் மன்னிப்பு கேட்கும் வரை, சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை கடலூரில் திரையிடக்கூடாது என்று கூறி அறிக்கை ஒன்றை பா.ம.க கட்சி வெளியிட்டுள்ளது.இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கு சூர்யா ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று