டொனால்ட் டிரம்ப்க்கு மீண்டும் அமெரிக்க அதிபர் பதவி! பரபரப்பு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

அடுத்த ஆண்டு (2024) அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட முடியாது என கொலராடோ மாகாண நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாண நீதிமன்றம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது திருத்தச் சட்டத்தின் படியே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வழக்கு விசாரணையின் முடிவில், டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், குடியரசுக் கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் நடைபெறும்போது, வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறி, ஒருவேளை அவரது பெயர் இடம் பெற்றாலும் அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் அவருக்கு தடை தடைவிதிக்கப்படவில்லை என்பதால், இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ள டொனால்டு தரப்பினர், மேல்முறையீடு செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய மேன்முறையீடு செய்யும் வகையில் இந்தத் தீர்ப்பு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 4-ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.