லெஜண்டுடன் சூப்பர்ஸ்டார்-வைரல் புகைப்படம்!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் ´தி லெஜண்ட்´. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியிருந்தார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியிருந்தது.இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு "சூப்பர் ஸ்டாருடன் தருணங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.