தமிழ் தேசியப் பரப்பில் உள்ள பாரம்பரியமான தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை சூறையாடுகின்ற வேலையை முன்னெடுத்து செல்வதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா (Umakaran Rasaiya) தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையிலே (Sri Lanka) சிறுபான்மையினராக அடையாளப் படுத்தப்படுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய அரசியல் தலைமைகள் கொள்கை மற்றும் சித்தாந்த அரசியலை செய்யாமல் மாறாக சலுகை அரசியல் பக்கமாக சென்றார்கள்.
மேலும் அரசியலை மக்கள் மயப்படுத்தக்கூடிய சேவைகளை அவர்கள் செய்யாமல், தமிழ் மக்களுடைய தேவைகளை உணர்ந்து போலியான வாக்குறுதிகளை இந்த கட்சிகள் வழங்குகின்றனர்.
ஒரு கட்டத்தில் சுமந்திரனுக்கும் (M. A. Sumanthiran), சாணக்கியனுக்கும் (Shanakiya Rasamanickam) பதவி ஆசை வந்தததை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே சுமந்திரனுக்கும், சாணக்கியனும் தேர்தல் காலத்தில் நிலையில்லாத நாடகத்தை ஆடுகிறார்கள்.
தமிழ் தேசிய பாதையில் தமிழரசு கட்சி பயணிக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆனாலும் அதில் இருக்க கூடிய தலைமைகள் சுமந்திரனை வலுவாக எதிர்ப்பதற்கு முடியாமல் திணரியமை பெரிய ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது இலங்கை தமிழரசு கட்சியானது சுமந்திரனுடைய சொந்த நிறுவனமாக மாறியுள்ளது.
ஆகையால் நாங்கள் தொடர்ச்சியாக அந்த கட்சிக்கே வாக்குகளை சேகரித்து கொடுப்பதென்பது மீண்டும் தமிழ் தேசிய இருப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்.