லைக்கா குழுமத்தின் தலைவரான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது!

அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில்  இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

கடந்த யூலை 31ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில்  அமையப்பெற்ற, திருவள்ளுவர் சிலையை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் லைக்கா ஹெல்த் தலைவர்  திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த விழாவில், ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடாதிபதியும்,  அகில உலக கம்பன்கழகத்தின் தலைவருமான சுவாமி சரஹபவானந்தா, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களுக்கு, “ஐரோப்பிய தமிழரசன்” என்ற  விருதை வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடாதிபதியும்,  அகில உலக கம்பன்கழகத்தின் தலைவருமான சுவாமி சரஹபவானந்தா, லைக்கா ஹெல்த் தலைவர்  திருமதி பிரேமா சுபாஸ்கரன் அவர்களுக்கு “வாசுகி” என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.