தடுமாறும் அரசாங்கம் - மக்களுக்கு மீண்டுமொரு பேரிடித் தகவல்!

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்கள் இல்லாமல் அரசாங்கம் தடுமாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது.

இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செலுத்த வேண்டிய மீதிப் பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை சீர் செய்யாமல் தனது அரசியல் நடவடிக்கைகளை தேவையற்ற வகையில் முன்னெடுத்து செல்வதாகவே பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.