பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர்: அவமானத்தில் தீக்குளித்த பாடசாலை மாணவி..!

பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்றுமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இந்திய மாநிலம் ஒன்றில் இடம்பெறுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, தேர்வில் தனது சீருடையில் மறைத்து வைத்திருந்த பேப்பர் சீட்டுகளில் இருந்து பார்த்து எழுகிறார் என சந்தேகப்பட்ட ஆசிரியர் உடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவிக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமியை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினரிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தில், தேர்வு அறையில் ஆசிரியர் தன்னை தேர்வில் பார்த்து எழுதியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வுத் தாள்களை உதறி தேடியுள்ளார். ஏதும் கிடைக்காததால் உடையில் வைத்திருக்கிறாய் என்று கேட்டு அவமானப்படுத்தியதாகவும், தன்னிடம் அப்படி ஏதும் இல்லை என்று மாணவி மறுத்ததையும் மீறி, சீருடையில் சீட்டுகளை மறைக்கிறாய் என்று சோதிக்க வகுப்பறையை ஒட்டிய அறையில் துணிகளை அகற்றச் செய்ததாகக் கூறினார்.

இந்த அவமானம் தாங்க முடியாமல் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். ஆசிரியர் மீது அளித்த முறைப்பாட்டின் படி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.