பிரியாணி சாப்பிட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு

குருணாகலில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட சிறுமி தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் சகோதரர் கடந்த 23ஆம் திகதி இரவு உணவிற்காக பிரியாணியை கிரியுல்ல நகரிலுள்ள உணவகம் ஒன்றில் கொண்டு வந்துள்ளார்.

பிரியாணியை சாப்பிட்டு உடல் அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தமை பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.