ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து உக்ரைனில் போராட்டம்!

ரஷ்யாவின் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில், ஆயிரக்கணக்கானோர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.கிழக்கு தொழில் நகரமான ரஷ்ய எல்லையில் இருந்து 42 கிமீ (26 மைல்) தொலைவில் அமைந்துள்ள கார்கிவ் நகரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தின் போது ‘கார்கிவ் உக்ரைன்’ மற்றும் ‘ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, மக்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.மேலும், அவர்கள் தேசிய கீதத்தைப் பாடினர் மற்றும் உக்ரேனியக் கொடிகளை அசைத்தனர். அதுமட்டுமல்லாமல் உக்ரைனை ஆதரித்த நட்பு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கொடிகளையும் அசைத்தனர்.‘கார்கிவ் ஒரு உக்ரேனிய நகரம் என்பதை நிரூபிக்க மக்கள் வீதிகளுக்கு வந்தனர், நாங்கள் சரணடைய மாட்டோம்’ என்று கார்கிவ் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.